அஜித்தும் கவுண்டமணியும் இரண்டு வேடங்களில் நடிக்க இருந்த படம் – கைமாறிய கதை!

அஜித் தற்போது புகழின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பரவியுள்ளது என்பது நமக்கு தெரிந்ததுதான்.

அஜித்- இயக்குனர் ஷங்கர் கூட்டணி அமைந்ததில்லை. இவர்கள் கூட்டணி அமைய வேண்டும் என்று ரசிகர்களின் பெரிய ஆசையாகும். ஆனால் இவர்கள் இணைய வாய்ப்பு அமைந்து அது நடக்காமல் போன கதை உங்களுக்கு தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம். நாசர் கதாபாத்திரத்தில் கவுண்டமணியும் பிரசாந்த் கதாபாத்திரத்தில் அஜித்தும் தான் இரண்டு வேடங்களில் நடிக்க இருந்தார்கள்.

இப்படம் முழுக்க முழுக்க  காமெடி படமாக எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார்.  பிறகு அஜித்தின் கால்ஷீட் கிடைக்காததால் இப்படம் கைமாறியது.

அதன் பிறகு  பிரசாந்த் வந்தவுடன் இப்படத்தை  காமெடியில் இருந்து ரொமான்ஸுக்கும் மாற்றிவிட்டார் ஷங்கர்.  1998ல் வெளிப்படும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Suggestions For You

Loading...

Leave a Comment