நேர்கொண்ட பார்வை கிளைமாக்ஸ் காட்சிக்கு அஜித் எடுக்கும் ரிஸ்க்!

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியின் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் படமான இதில் அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

விறுவிறுப்பாக நடந்துவரும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

வழக்கம் போல சண்டை காட்சிகள் என்றால் டூப் போடாமல் நடிக்கும் அஜித் இதிலும் பின்தொடர்கிறார். இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டையை டூப் பயன்படுத்தாமல் அஜித்தே செய்துள்ளாராம்.

இதற்குமுன் பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்ட அஜித் இப்படி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...

Leave a Comment