ஒரே நேரத்தில் மூன்று பிரபலங்களை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்!

அஜித்தை பற்றி ஏதாவது ஒரு செய்தி தினமும் சமூக தளங்களில் வந்துகொண்டுதான் இருக்கிறது. அஜித்துடன் பணிபுரிந்தவர்கள் அவரை பற்றி புகழ்ந்து சொல்லாத ஆளே இல்லை என்று தான் கூறவேண்டும்.

தற்போது வினோத் இயக்கத்தில் 59வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான ஷுட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

அங்கு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் சரித்திர படத்தின் படப்பிப்பு நடந்து வந்தது, அதை அறிந்த அஜித் இருவரையும் சந்தித்தார்.

அதே நேரத்தில் பிரபாஸின் புதிய படங்களின் படப்பிடிப்பும் நடக்கிறது. இதனை அறிந்த அஜித் அவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு அவர்களுடன் சில மணி நேரம் பேசியுள்ளார்.

ஒரே வாரத்தில் மூன்று பிரபலங்களை சந்தித்து அஜித் பேசியிருப்பது ஒரு நல்ல விஷயம் தான்.

Suggestions For You

Loading...

Leave a Comment