வைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகைப்படம் ! (உள்ளே)

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப் பெற்ற பிங்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார், அவருடன் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் அதிகம் பேர் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

அப்படி ஒரு ரசிகர் எடுத்த புகைப்படத்திற்கு பின் அஜித்-வித்யா பாலன் மாலையுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் உள்ளது. அந்த புகைப்படத்தையே இப்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பை படுவேகமாக முடித்துள்ளார் எச்.வினோத். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Suggestions For You

Loading...