ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!

ஆடை படத்தை இயக்கியவர் ரத்னா குமார் அவர் இதற்கு முன்னாள் மேயாத மான் படம் இயக்கியுள்ளார், இப்படம் சில பல காரணங்களால் சொன்ன நேரத்தை விட தாமதமாக திரைக்கு வந்தது, படம் வருவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, பல தடைகளை உடைத்து திரைக்கு வந்துள்ளது இப்படம்.

நம் அனைவரும் விளையாட்டாக செய்யும் செயல்கள் எப்படி எல்லாம் மற்றவர்களை பாதிக்கும் என்பதை இப்படம் மிக அழகாக கூறியுள்ளது. படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் அமலா பாலின் நிர்வாண காட்சிதான் அதை கொஞ்சம் கூட முகம் சுளிக்கும் வகையில் எடுக்க வில்லை, அதற்கு ஒளிப்பதிவாளரை பாராட்டவேண்டும், எதை எடுத்தாலும் அதை ஆபாசமாக காட்டும் இக்காலத்தில் பாதி படம் நிர்வாகமாக இருந்தும் அதை எந்த வகையிலும் ஆபாசமாக காட்டவில்லை.

படத்தின் கதையை சொல்லாமல் ஒருவார்த்தையில் கூற வேண்டும் என்றால், இப்படம் தற்போது உள்ள சமுதாயத்திற்கு ஏற்ற ஒரு படம் மிக சிறப்பாக இப்படத்தை ரசிக்கும் படி அமைத்துள்ளனர் படக்குழு, குடும்பங்களால் கொண்டாட படும் என்பது சந்தேகம் தான், ஆனால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என நம்பலாம், அமலா பாலின் இரண்டாவுது இன்னிங்ஸ்கு இது ஒரு நல்ல துவக்கம்.

wetalkiess rating – 3.75/5

Suggestions For You

Loading...