பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’

avengers endgame

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் இந்தியாவில் பெரிய மார்க்கெட் இருப்பது தெரிந்த கதை தான். ஆனால், இந்தியப்படங்களையே ஓரங்கட்டும் அளவிற்கு ஒரு ஹாலிவுட் படம் வந்தால் அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தானே.

அந்த வகையில் அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ நேற்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் முதல் நாளே இந்தியாவில் கிட்டத்தட்ட 9 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் ரூ 62 கோடி வரை இப்படம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இப்படம் 1.19 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது.

இதனால் பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல் நாள் சென்னை வசூலை இப்படம் முறியடித்துள்ளது. பேட்ட படம் 1.17 கோடியும் விஸ்வாசம் படம் 88 லட்சமும் முதல் நாளில் சென்னையில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...