அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் முழுவதும் குவித்த வசூல்!

AvengersEndgame-2

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் தொடர்ந்து மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டி வருகிறது அது.

பல இடங்களில் வெளியாகி தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியை வசூலித்து விட்டதாம். இந்தியாவில் 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய முதல் ஹாலிவுட் படம் இதுதான்.

சிம்பு குரலில் மாநாடு சிங்கிள் பாடல் கசிந்தது – இதோ!

மேலும் உலக அளவில் 2 பில்லியன் டாலர்கள் (ரூ 13836 கோடி) என்ற பிரம்மாண்ட மைல்கல்லை இந்த படம் தற்போது தாண்டியுள்ளது. இதுவரை நான்கு படங்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளன. Avatar, Titanic, Star Wars: The Force Awakens, Avengers: Infinity War ஆகியவை தான் இதுவரை 2 பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்துள்ளன.

மேலும் வசூலில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் டைட்டானிக் பட சாதனையை முறியடித்து, உலக அளவில் வசூலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இப்போது முதல் இடத்தில் அவதார் படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...