தல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரிப்பாளர் போனி கபூர்!

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படுபவர் அஜித். இவருக்கு நடிப்பதை தாண்டி பைக், கார் ரேஷ், சமையல், போட்டோ கிராபி என பல திறமைகளுக்கு சொந்தக்காரராவார்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கிறார். அதையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார்.

தற்போது போனி கபூர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அஜித்திற்கு விளையாட்டு மற்றும் ரேஸிங்கில் ஆர்வம் இருப்பதை அரிந்து சந்தோஷப்பட்டேன், தல 60வது படமும் வேகத்தை மையப்படுத்திய ஒரு திரில்லர் படம் என்று கூறியுள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தில் ரேஸ் குறித்த காட்சிகள் இருக்கும் என்பது தல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment