கொலையை விட பெரிய குற்றம் இதுதான் – தோனி பேச்சு

உலகளவில் மிக பெரிய ரசிகர்களை கொண்டது ஐபிஎல் கிரிக்கெட் தொடர். இதன் 12வது சீசன் வரும் 23ஆம் தேதி தொடங்கி ஒன்றரை மாதம் நடக்கவுள்ளது. இதில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் இந்த அணியின் கேப்டன். இந்நிலையில், சென்னை அணியை பற்றி உருவாகி உள்ள டாக்குமென்டரி படத்தின் டிரெய்லர் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வரும் தோனி கூறியிருப்பதாவது: தன் வாழ்க்கையில் கொலையை விட பெரிய குற்றமாக கருதுவது மேட்ச் பிக்சிங்கை தான். அந்த குற்றச்சாட்டு அணி மீதும் தன்மீதும் எழுந்தது. அப்போது அனைவருக்கும் கஷ்டமான சூழலை உருவாக்கியது. இந்த குற்றச்சாட்டால் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை ரசிகர்கள் மிகவும் மோசமானதாக கருதினர். ஆனால், சென்னை அணி மீண்டும் திரும்பி இருக்கிறது.…

Read More

பாகிஸ்தான் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட அபிநந்தன் தற்போதைய நிலை – புதிய விடியோவால் நிம்மதி!

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லை பகுதிகளில் கடும்பதற்றமாக காணப்படுகிறது. இதனிடையே இன்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் காயத்துடன் ஒரு கமாண்டோ பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார். அங்கே பாகிஸ்தான் ராணுவம் அவரை கைதுசெய்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக விடியோவுடன் கூடிய தகவல்வந்தது. முதலில் பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவில் அபிநந்தன் என்ற அந்த கமாண்டோவை தாக்கப்பட்டு முகம் முழுவதும் ரத்த காயத்துடன் காணப்பட்டார். தற்போது வேறொரு வீடியோ வெளியாகியுள்ளது, இதில் பாகிஸ்தான் ராணுவம் அவருக்கு முதலுதவி செய்து மரியாதையுடன் நடத்தப்படுகிறார். மேலும் அந்த வீடியோவில் பேசும் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவம் மிகவும் மரியாதையுடன் நடந்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.. #AbhinandanGetting reapected treatment from #pakarmy.…

Read More

இவர்கள் நினைத்தால் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தலாம் – பிரபல நடிகர் வேண்டுகோள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று ஒரு இந்திய விமானப்படை போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி விமானி அபிநந்தனை கைது செய்துள்ளது. அங்கே அவரை கைதியாக வைத்திருக்கும் பாகிஸ்தான் அடுத்தகட்ட நடிவடிக்கை என்ன என்பது தெரியவில்லை. இது பற்றி மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் மாதவன், “இது தீவிரவாதத்திற்கு எதிரான போர், இரண்டு நாடுகளுக்கு நடுவில் இல்லை. மீடியா நினைத்தால் இது போராக மாறாமல் தடுக்க முடியும். பொறுப்புடன் செயல்படுங்கள், அமைதி வரட்டும்” என கூறியுள்ளார். It’s a war against terror not between 2 nations yet. Dear Media —-you can actually stop this escalation ..…

Read More

பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட இந்திய விமானி – அங்கே அவருக்கு நடக்கும் கொடுமை!

இம்மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால் கடும் கோபத்தில் இருந்த இந்திய தனது விமானப்படையைச் சேர்ந்த போர்விமானங்களுடன், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று நடந்த இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் காயத்துடன் ஒரு விமானி பாகிஸ்தான்ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார். அங்கே பாகிஸ்தான் ராணுவம் அவரை கைதுசெய்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக விடியோவுடன் கூடிய தகவல் வந்துள்ளது. பாகிஸ்தான் வெளியிட்ட இந்த…

Read More

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய அதிரடி தாக்குதல் – பயந்து ஓடிய பாகிஸ்தான் விமானங்கள்!

இம்மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. பதிலடி: இதனால் கடும் கோபத்தில் இருந்த இந்திய தனது விமானப்படையைச் சேர்ந்த போர்விமானங்களுடன், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 ‘மிராஜ் 2000’ ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முகாம்கள் அழிப்பு: ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதில்…

Read More