தளபதி 63 படத்தில் பொல்லாதவன் வில்லன் – வெளியான கதாபாத்திர தகவல்!

தெறி, மெர்சல் படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய்-அட்லீ கூட்டணி இணைத்துள்ளது. விஜய்யின் 63வது படமான இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ இயக்கும் படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துவருகிறார்.

படப்பிடிப்பு தள புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகும் போது ரசிகர்கள் பிரம்மிப்பாக பார்க்கிறார்கள். இப்படத்தில் பொல்லாதவன் பட வில்லன் டேனியல் பாலாஜி ஒரு முக்கிய வில்லனாக நடிக்கிறார், படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் படம் சூப்பராக வந்து கொண்டிருக்கிறது, வில்லனாக நடிக்கிறேன், உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லனாக இருப்பேன் என கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Suggestions For You

Loading...