சூர்யாவுடன் மோத விரும்பாத விஜய் ! – அதிரடி முடிவு!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் “என்.ஜி.கே” அரசியல் படமான உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி செம வரவேற்பு கிடைத்த நிலையில் மே 31 ஆம் தேதி அறிவிப்பு வந்துள்ளது.

இதே மே 31ஆம் தேதி விஜய் தேவரகொண்டாவின் “டியர் காம்ரேட்” என்ற திரைப்படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் , மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சூர்யாவின் “என்.ஜி.கே” திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாவதால் ‘டியர் காம்ரேட்’ படத்தை தமிழில் மட்டும் ஒரு வாரம் கழித்து அதாவது ஜூன் 6ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளார்களாம். விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Suggestions For You

Loading...