தல 59 படத்தின் இணைந்த பழம்பெரும் நடிகர் – அவரே கூறிய சுவாரசிய தகவல்கள்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் கடந்த மாதம் வெளியாகி செம ஹிட் படமாக அமைந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் அஜித் இப்போது ஒரு ரீமேக் படம் நடிக்கிறார். இன்றிலிருந்து புதிய பட படப்பிடிப்பில் அஜித் இணைகிறார் என்று கூறுகின்றனர்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார், அவரின் அப்பா கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடிக்கவுள்ளார்.

அவர் ஒரு பேட்டியில், ஹிந்தியில் நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை, தமிழில் மாற்றுவார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன், அஜித் படம் கூட.

இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் நிறைய போன் கால்கள், கனடா, மலேசியா என வருகிறது, அஜித்தை பார்க்க வேண்டும் என போன் வந்ததால் அவர் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...