நடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா எச்சரிக்கை !

vikram-director-bala

நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் அறிமுகமாகும் படம் ஆதித்திய வர்மா. அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான இதை முதலில் பாலா வர்மா என்ற பெயரில் இயக்கியிருந்தார்.

அந்த படம் விக்ரம் மற்றும் தயாரிப்பாளருக்கு பிடிக்காததால் வர்மா படத்தை குப்பையில் போட்டுவிட்டு வேறுஒரு இயக்குனரை வைத்து ஆதித்திய வர்மா என்ற பெயரில் மீண்டும் படமாகிவருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா நடிகர் விக்ரமுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாலா இயக்கிய படம் சரியில்லை என கூறி மொத்த படத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தற்போது மீண்டும் வேறு பெயரில் படமாக்கி வருகின்றனர்.

அந்த படத்தில் நான் இயக்கிய காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்று தான் பாலா எச்சரித்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.

Suggestions For You

Loading...