வர்மா சோகம்.. – மீண்டும் முன்னணி நடிகருடன் பாலா இனைகிறாரா?

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தான் கூறவேண்டும். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற தரமான படங்களை கொடுத்தவர்.

ஆனால் இவரது கடைசி இரண்டு படங்கள் கொஞ்சம் வருத்தம் அளிக்கும் விதமான அமைந்தது. அதிலும் இவர் இயக்கிய வர்மா படம் தயாரிப்பாளருக்கு பிடிக்காததால் அந்த படம் குப்பைக்கு போனது பெரிய அடியாக பாலாவிற்கு விழுந்தது.

இதை உணர்ந்த நடிகர் சூர்யா, தன் 2டி நிறுவனத்தில் தன்னை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கொடுத்துள்ளாராம்.

இந்நிலையில் பாலா தற்போது கதை விவாதத்தில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது, சூர்யா கஷ்டப்பட்ட காலத்தில் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை கொடுத்து சூர்யாவின் திரை வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டது பாலா தான் என்பது மறுக்கமுடியாது.

Suggestions For You

Loading...

Leave a Comment