விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கதை கேட்ட ரஜினிகாந்த் !

rajinikanth director siva

அஜித்தை வைத்து தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களைஇயக்கியவர் சிவா. இதில் விவேகம் தவிர மற்ற படங்கள் வெற்றிப் பெற்றன. அதிலும் கடந்த பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் வெளிவந்த விஸ்வாசம் படம், வசூலிலும் பட்டையை கிளப்பியது.

சிவா, அடுத்தப்படியாக சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதனை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிவா. இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்தது.

விஸ்வாசம் படத்தை பார்த்த ரஜினி, தந்தை, மகள் பாசத்தை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் காட்டியதாக சிவாவை பாராட்டினாராம்.

அப்போது ரஜினியிடம் இரண்டு மூன்று கதைகளை சிவா சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ஏ ஆர் முருகதாஸின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் சிவாவிடம் ரஜினி கதை கேட்டிருப்பதன் மூலம் ரஜினியின் அடுத்தப்படத்தை சிவா இயக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி, கேஎஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜிடம் ஆகியோரிடமும் கதை கேட்டுள்ளார். இதன்மூலம் ரஜினியின் அடுத்தப்படத்தை இந்த மூவரில் ஒருவர் இயக்கலாம் என தெரிகிறது.

Suggestions For You

Loading...