குப்பைக்கு போன என்னை நோக்கி பாயும் தோட்டா – இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம் !

enai noki paayum thota

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “என்னை நோக்கி பாயும் தோட்டா” நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது.

enai noki paayum thota-still
enai noki paayum thota-still

சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. இப்படத்தின் டீசர், பாடல்கள், வீடியோ பாடல்கள் என படத்தை தவிர அனைத்தும் கடந்த வருடமே வெளியானது.

தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசர், வீடியோ பாடல்கள் என அணைத்து Youtubeல் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்படம் வெளியாகாது என்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வர்மா படம் போல குப்பைக்கு போய்விட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Suggestions For You

Loading...