துருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் இயக்குனர் கெளதம் மேனன்!

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் லிஸ்டில் இருப்பவர் கெளதம் மேனன். கிளாஸ் இயக்குனர் என்று பெயர் வாங்கிய இவருக்கு கொஞ்ச காலமாக நேரம் சரி இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

இவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்ட, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாகாத நிலையில் இவர் தயாரித்த நரகாசூரன் படம் கூட வெளியாகாமல் பிரச்சையில் இருக்கிறது.

இந்நிலையில், துருவ் விக்ரம் நடித்துவரும் ஆதித்ய வர்மா படத்தில் துருவின் தந்தையாக நடிக்க இயக்குனர் கெளதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு பணிகளில் விரைவில் கெளதம் மேனன் இணைய உள்ளார்.

படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். துருவ் விக்ரமின் நண்பர் வேடத்தில் அன்புதாசன் நடிக்கிறார்.

Suggestions For You

Loading...

Leave a Comment