மீண்டு வா நேசா ! – நேசமணிக்காக ஹர்பஜன் சிங் உருக்குமான பதிவு!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் அதிகம் ஈர்த்தவர் காமெடி நடிகர் வடிவேலு. அவர் காமெடியனாக நடிப்பதை குறைத்துக்கொண்டாலும் அவரது காமெடி இப்போதும் தொலைக்காட்சிகளில் அதிகம் பார்க்கலாம்.

அதிலும் குறிப்பாக பிரென்ட்ஸ் படத்தில் கான்ட்ராக்ட்டர் நேசமணி கதாபாத்திரத்தில் வடிவேலுவின் காமெடியை இப்போது பார்த்தாலும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.

நேற்றில் இருந்து #Pray_for_Neasamani என்ற ஹாஸ் டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. நேசமணி தலையில் சுத்தி விழுந்த காமெடி தான் தற்போது திடீரெனெ ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் வேண்டும். இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்….ட்ச் மீண்டு வா நேசா ! என்று குறிப்பிட்டுள்ளார்.

Suggestions For You

Loading...