பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட இந்திய விமானி – அங்கே அவருக்கு நடக்கும் கொடுமை!

இம்மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.

இதனால் கடும் கோபத்தில் இருந்த இந்திய தனது விமானப்படையைச் சேர்ந்த போர்விமானங்களுடன், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று நடந்த இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதில் காயத்துடன் ஒரு விமானி பாகிஸ்தான்ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார். அங்கே பாகிஸ்தான் ராணுவம் அவரை கைதுசெய்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக விடியோவுடன் கூடிய தகவல் வந்துள்ளது.

பாகிஸ்தான் வெளியிட்ட இந்த வீடியோவை இந்திய வெளியுறவு துறை செயலாளரும் உறுதிசெய்துள்ளார். இதனிடையே பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய கமாண்டர் அபிநந்தனை கோரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அபிநந்தன் எனபவர் சென்னையை சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...