பிரச்சனைக்கு பிறகு கட்டித்தழுவிய இளையராஜா, எஸ்.பி.பி – என்ன நடந்தது தெரியுமா?

ilayaraja s p balasubrahmanyam

இசையமைப்பாளர் இளையராஜா ‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக்கூடாது’ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதால், இளையராஜா-எஸ்.பி.பி. இடையே பிரிவு ஏற்பட்டது. இதனால் இசை ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் எஸ்.பி.பி பாடவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒத்திகை வரும் மே 22-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. எஸ்.பி.பி மட்டுமல்லாது யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட இருக்கின்றனர்.

ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் தோன்றுவது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

Suggestions For You

Loading...