நேர்கொண்ட பார்வை தலைப்பில் மறைந்திருக்கும் வார்த்தைகள் – இதை கவனித்தீர்களா?

அஜித் விஸ்வாசம் படத்துக்கு பிறகு இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

நேர்கொண்ட பார்வை என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முக்கிய வேடங்களில் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

அஜித் இதில் வக்கீலாக நடிக்கிறார், மூன்று பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையில் இருந்து அஜித் எப்படி காப்பாற்றுவார் என்பது தான் கதை.

நேர்கொண்ட பார்வை போஸ்டரில் ஒரு முக்கிய விஷயம் இடம்பெற்றுள்ளது, அதாவது அந்த தலைப்பின் உள்ளே சில வார்த்தைகள் இடம்பெறுள்ளது. பெண்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

Suggestions For You

Loading...