தளபதி 63யில் நடிப்பது குறித்து முதல் முறையக பேசிய ஜாக்கி ஷெராப்!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்னையில் இப்படப்பிடிப்பு நடந்துவருகிறது. நாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் கதிர், விவேக், யோகி பாபு நடிக்கிறார்கள்.

தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைத்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அவர் என் Kudrat ka Kanoon பட இயக்குனரின் மகன் ,அவர் தந்தையையும் விஜய்யையும் மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் ஒரு மாபெரும் நடிகர் மற்றும் நல்ல மனிதர் என அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதோடு அட்லீ ஒரு சிறந்த இயக்குனர்,என்னை ஒரு குழந்தையை போல படக்குழுவினர் பார்த்துக்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment