காப்பான் படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா தரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.

எதிர்பாத்த அளவிற்கு இந்த படம் வெற்றிபெறுவில்லை என்றாலும் லாபத்தை தந்தது, அதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட சூர்யா, வரும் 14ஆம் தேதி இதன் டீசர் வெளியாகவுள்ளது. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஆர்யா, மோகன்லால் போன்ற நட்சத்திரங்கள் நடித்துவரும் இப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிவருவது.

என்.ஜி.கே டீசரை தொடர்ந்து “காப்பான்” டீசர் மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் பரவியது. ஆனால் அது பொய்யாம்.

என்.ஜி.கே படம் ரிலீஸ் ஆகும்வரை “காப்பான்” மற்றும் சூர்யா நடிக்கும் எந்த படத்தின் அறிவிப்புகளும் வெளியாகாதாம். இதை சூர்யா தரப்பு தெரிவித்துள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment