காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?

Suriya

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இதில் மோகன் லால், ஆர்யா மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகா சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கே வி ஆனந்த் உடன் பழம்பெரும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் இணைந்து இந்த கதையை உருவாக்கியிருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி செம வரவேற்பை பெற்றுள்ளது. மோகன் லால் இதில் பிரதமராக நடித்துள்ளார், அவரது பாதுகாப்பு அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்துளளது. இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...

Leave a Comment