வார நாட்களில் வெளுத்து கட்டிய கபீர் சிங் வசூல் – ஆல் டைம் ரெக்கார்

ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் கபீர் சிங் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் தெலுங்குப்படமான அர்ஜுன் ரெட்டி ரீமேக் என்பது பலருக்கும் தெரிந்தது தான்.

இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ 70 கோடி வசூல் செய்தது, வார நாளான நேற்று அதுவும் திங்கள் கிழமை வசூல் ரூ 8 கோடி வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், நேற்று கூட இப்படம் ரூ 17 கோடி வசூல் வந்துள்ளது, இவை ஒரு வகையில் ஆல் டைம் ரெக்கார்ட் என கூறப்படுகின்றது.

ஏனெனில் கபீர் சிங் முதல் நாள் ரூ 20 கோடி வசூல் செய்ய, 4வது நாள் ரூ 17 கோடி வசூல் செய்தது பெரிய சாதனை என கூறப்படுகின்றது, மேலும், இது தான் ஷாகித் கபூரின் ஆல் டைம் ரெக்கார் வசூலாம்.

Suggestions For You

Loading...