இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வேற லெவல் தான் அப்போ!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் படம் “இந்தியன் 2”. இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைத்துள்ளது.

முதல் கட்ட ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 10ஆம் தேதி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி இந்தியன்-2 படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினந்தன்று ரிலீஸாக உள்ளதாம்.

இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளார்கள். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment