சூப்பர் ஹிட் படம் கொடுத்த இளம் இயக்குனருடன் விஜய்? – தளபதி 64 சர்ப்ரைஸ் அப்டேட்!

vijay

அட்லீ படத்திற்கு பிறகு விஜய் அடுத்த யாருடன் இணையப்போகிறார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. பலரும் மோகன் ராஜா தான் என்று கூறிய நிலையில் தற்போது விஜய் இளம் இயக்குநர்களிடமும் கதை கேட்டு வருகிறாராம்.

அந்த வகையில் மாநகரம் லோகேஷிடம் அவர் கதை கேட்டுள்ளார். அது மட்டுமின்றி துருவங்கள் 16 என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் நரேனிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.

விஜய்யின் 63வது படத்தை இயக்கி வருகிறார் அட்லீ, நயன்தாரா நாயகியாக நடிக்க இந்துஜா, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்குவரவுள்ளது.

Suggestions For You

Loading...