அஜித்தை வம்பிற்கு இழுத்த கார்த்திக் சுப்பாராஜ் – வறுத்தெடும் தல ரசிகர்கள்!

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ரஜினியை திரையில் காட்டிய விதம் ரஜினி ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது. அதே சமயம் அஜித்தின் விஸ்வாசம் படமும் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளியானது.

பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் பட்டிதொட்டியெல்லாம் அதிகம் பேசப்பட்டது. இதனால் பேட்ட, விஸ்வாசம் போட்டியில் விஸ்வாசம் வெற்றிபெற்றது என்றே பேசப்பட்டது.

இந்நிலையில் நேற்று பேட்ட படம் சன் டிவியில் ஒளிபரப்படுகிறது. அது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட கார்த்திக் சுப்பாராஜை தற்போது அஜித் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

காரணம் அந்த பதிவில் அவர் ‘தல’ என தோணியை குறிப்பிட்டுள்ளது தான். அதை பார்த்த அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை திட்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் வம்பிற்கு இழுக்கும் மாதிரி கார்த்திக்கின் ட்வீட் இருந்தது தான் அஜித் ரசிகர்களுக்கு கோபம், நீங்களே அந்த ட்வீடை பாருங்க…

Suggestions For You

Loading...

Leave a Comment