நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

Nerkonda-Paarvai-Ajith

அஜித் தற்போது போனிகபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘தீரன்’ பட இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் இதற்கு முன்பாக உதயம் என்.எச்.4, காஸி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Suggestions For You

Loading...