தமிழ் படத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கியாரா அத்வானி?

ஹிந்தியில் பிரபலமான நடிகை கியாரா அத்வானி. இவர் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்தவர். நெட்பிலிக்ஸில் அவர் நடித்திருந்த லஸ்ட் ஸ்டோரீஸ்-ல் சுய இன்பக் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அக்காட்சியை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்ததாக அவர் கூறியிருந்தது சர்ச்சையில் சிக்கியது.

அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கில் இவர் தான் நாயகி. டிரெய்லரிலேயே அவரது நடிப்பை பாலிவுட் பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் இவர் தமிழில் நடிக்க இருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு புது படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ஹிந்தியில் இருந்து ஒரு நடிகையை இறக்குமதி செய்ய நினைத்த விக்னேஷ் சிவன், கியாரா அத்வானியிடம் பேசியிருப்பதாகவும், அவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகும் கியாரா அத்வானி, அதே டாப் கியரிலேயே கவர்ச்சி வேகத்தைத் தொடருவாரா அல்லது கியரைக் குறைத்து மெல்லமாகச் செல்வாரா என்பது இயக்குநர் விக்னேஷ் சிவன் கையில் தான் இருக்கிறது.

Suggestions For You

Loading...