நயன்தாரா காதலன் மீது வழக்கு தொடர போகும் அஜித் பட இயக்குனர் – கோலிவுட்டில் பரபரப்பு!

VigneshShivan_Nayanthara

நயன்தாரா தற்போது சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியன இவரது ஐரா படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

இதையடுத்து பில்லா 2 இயக்குனர் சக்ரி டொலட்டி இயக்கத்தில் கொலையுதிர் காலம் என்ற படத்தின் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதா ரவி நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையான விஷயம் எல்லாம் அனைவரும் அறிந்தது தான்.

அப்போது ராதாரவி பேசியதை எதிர்த்து ட்வீட் செய்திருந்தார் விக்னேஷ் சிவன். “இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்ததால் கொலையுதிர் காலம் படத்தை வாங்க இருந்த விநியோகஸ்தர்கள் யாரும் தற்போது முன்வரவில்லை என்றும். ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு பின் சாட்டிலைட் ரைட்ஸ் பெற்றுக்கொள்வதாக பெரிய நிறுவனம் ஒன்று அறிவித்திருந்ததும் இதனால் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீது இயக்குனர் சக்ரி டொலட்டி வழக்கு தொடர இருப்பதாகவும், இதனால் ஆன நஷ்டத்திற்கு விக்னேஷ் சிவனே பொறுப்பேற்க வேண்டும் என படக்குழு கோரவுள்ளது. இந்த வழக்கு குறித்து படக்குழு ஆலோசனையில் இறங்கியுள்ளதாம்.

Suggestions For You

Loading...