அஜித்தை கிண்டல் செய்த குறளரசன்? – டி.ஆர் அவசர விளக்கம்

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீா் உள்ளிட்ட படங்களை இயக்கியவா் சுசீந்திரன். இவா் அஜீத்தை அரசியலுக்கு அழைப்பு விடுத்து சமூக வலைத்தளத்தில் கருத்து ஒரு தெரிவித்திருந்தார்.

அதில் “40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்மே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இது தான் 100 சதவிகிதம் சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலக்கோடி மக்களில் நானும் ஒருவன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை கிண்டல் செய்யும் விதமாக டி.ராஜேந்திரனின் மகன் குறளரசன் தனது முகநூலில் ஒரு பதிவு செய்திருந்தார்


மேலும் அதில் எங்க அப்பாதான்யா அடுத்த முதல்வர் என்று பதிவு செய்திருந்தார். இது அஜித் ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதை முற்றிலும் டி.ராஜேந்தர் மறுத்துள்ளார், “குறளரசனின் கருத்து Kuran Arasan T.Rajendar என்கிற முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது போலி கணக்கு. Kural Tr என்பதுதான் குறளரசனின் முகநூல் கணக்கு” என்று டி.ஆர் தரப்பு பதிலளித்துளளது.

Suggestions For You

Loading...

Leave a Comment