சிம்புவின் மாநாடு படம் நின்றுபோனதா? – தயாரிப்பாளரே சொல்லிவிட்டார்!

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” படத்தில் நடிக்க இருக்கிறார். சுரேஷ் காமாட்சி இப்பாததை தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளதாகவும் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெய் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இப்படம் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்னும் தொடங்வில்லை.

இதனால் படம் நின்றுபோனது என்று தகவல் வெளியாகின. இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முற்றிலும் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘படம் கைவிடப்பட்டதாக வரும் வதந்திகளை நிறுத்துங்கள். ஒரு படத்தை தொடங்குவது அவ்வளவு சுலபமானது அல்ல. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என்றார்.

Suggestions For You

Loading...

Leave a Comment