பொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

mani-ratnam

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பல காலகட்டங்களில் முயற்சிகள் நடந்தன. எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோருக்கும் இதை படமாக்கும் ஆசை இருந்தது. இதை இப்பொது மணி ரத்னம் நிறைவேற்றியுள்ளார்.

ஆம், லைகா நிறுவனம் தயாரிக்க பொன்னியின் செல்வன் படத்தை மணி ரத்னம் இயக்கவுள்ளார். நாவலில் இடம் பெற்றுள்ள வந்தியதேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டவர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன், குந்தவை, வானதி, நந்தினி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு முன்னணி நடிகர்- நடிகைகளை தேர்வு செய்வதும் சவாலாக இருந்தது.

இதில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கின்றார்களாம்.

நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன்பாபு, சுந்தர சோழராக அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

இந்த கதையில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தான் நீளமான மற்றும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரமாகும்.

Suggestions For You

Loading...