அஜித் சொன்ன இந்த ஒரு வார்த்தையால் இசையமைப்பாளர் ஜிப்ரான் குதூகலம்!

கமல் ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான். கமல் ஹாசனின் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இவர் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார். அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் ‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ என்று கூறியுள்ளார். அஜித் கூறியது தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான். விரைவில் அஜித் படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Suggestions For You

Loading...