சர்கார் படத்திற்கும் தளபதி 63 படத்திற்கும் இப்படியொரு கனெக்சனா?

தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. விஜய்யின் 63வது படத்தை தற்போது அட்லீ இயக்கி வருகிறார்.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இதில் விஜய் முதன்முறையாக பயிற்சியாளராக நடிக்கிறார், படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போட்டு நடந்து வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நயன்தாரா மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து இப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது.

தற்போது வந்த புது தகவல் என்னவென்றால் படத்தில் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சித் சம்பத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அட்லீ படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும் என்று அவரது பி.ஆர். ஓ கூறியதாக நாஞ்சித் சம்பத் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த பட வாய்ப்பு தளபதி 63 படத்திலா? அல்லது அட்லீ தயாரிக்கும் படத்திலா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் கடைசியக நடித்த சர்கார் படத்தின் கூட பிரபல அரசியல் பிரமுகர் பழ. கருப்பையா நடித்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...

Leave a Comment