அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவிற்கு கிடைத்த கெளரவம் – மாஸ்!

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.

படத்தில் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது, யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு சென்னையின் உள்ள ஜிகே சினிமாஸ் திரையரங்கில் 28ஆம் தேதி காலை 5 மணி காட்சி திரையிடப்பவுள்ளது.

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே 5மணி காட்சிகள் போடப்பட்டுவந்த நிலையில் தற்போது ஒரு ஹீரோயினுக்கு இது நடப்பது இதுவே முதல் முறை.

Suggestions For You

Loading...