நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் !

சோலோ ஹீரோயினாக கலக்கிவரும் நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான படம் தான் ஐரா. வழக்கமான படங்களை போல இல்லாமல் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

ஐரா படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நயன்தாரா நடிப்பில் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஆனால் படம் என்னவோ கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பிரம்மாண்டமாக வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 33 லட்சம் வசூலித்துள்ளதாம். இந்த வசூல் நல்ல தொடக்கமே என்று கூறினாலும் நல்ல விமர்சனங்கள் வந்தால் மட்டுமே இது தொடரும் என்கிறார்கள்.

Suggestions For You

Loading...