ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் – செம கூட்டணி!

சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார், அதை தொடர்ந்து இசையமைப்பார் அனிருத் ஒப்பந்தமானார்.

இந்நிலையில் இப்படத்தில் இரண்டு நாயகிகளாம், நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ஏற்கனவே ரஜினிகாந்துடன் நயன்தாரா சந்திரமுகி படத்தில் நடித்துள்ளார் என்பது தெரியும், தற்போது முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் இணைத்துள்ளார்.

Suggestions For You

Loading...