தர்பார் படத்தில் நயன்தாராவிற்கு இப்படியொரு கதாபாத்திரமா? – செம தகவல்!

darbar-nayanthara

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 167 வது படம். இதில் ரஜினியை அவரின் மூன்று முகம் படம் போல காட்ட இருக்கிறார்களாம்.

ரஜினி போலிஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அண்மையில் அவர் படப்பிடிப்பில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

இதில் நயன்தாரா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றாராம், இவர் ரஜினிக்கு ஜோடியா என்று தெரியவில்லை. ரஜினி-நயன்தாராவிற்கு இடையே செம்ம கலாட்டா காமெடி காட்சிகள் இருக்கின்றதாம், அதிலும் சமீபத்தில் ரஜினி கிரிக்கெட் ஆடுவது போல் சில புகைப்படங்கள் லீக் ஆனது.

இதில் நயன்தாராவும் இருந்தார், நயன்தாரா இப்படத்தில் கல்லூரி ஆசிரியையாக நடிக்கின்றாராம், இதற்கு முன் இவர் ஏகன் படத்தில் இப்படி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Shooting Spot
Darbar Shooting Spot

Suggestions For You

Loading...