தன்னை கேவலமாக விமர்சித்த ராதாரவிக்கு நெத்தியடி பதிலளித்த நயன்தாரா – இதோ அறிக்கை!

தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் தரமான படங்கள் கொடுத்து முன்னணியில் இருந்து வருகிறார் நயன்தாரா.

அடுத்தடுத்து உருவாகி வரும் இவரது படங்களுக்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் நடிகர் ராதா ரவி, நயன்தாராவை மோசமாக விமர்சனம் செய்திருந்தார். அந்த விஷயம் வைரலாக பேசப்பட பிரச்சனை வெடித்தது.

பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நயன்தாரா தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன். மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைகிறார்

திரைப்பட விழாவில் நடிகர் ராதாரவி பேசியபோது சிலர் கைதட்டி ரசித்து சிரித்து மகிழ்ந்தனர்; இதுபோன்ற ரசிகர்கள் உள்ளவரை ராதாரவி போன்றோர் தரக்குறைவாக பேசுவது நீடிக்கும்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண்கள் கொடுக்கும் புகார் பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுபடி நடிகர் சங்கம் விசாகா கமிட்டி அமைக்குமா?

தம்மைப் பற்றி நடிகர் ராதாரவி பேசியது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும். ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment