நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் அப்டேட் – ரிலீஸ் தேதி இதுவா?

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ‘பிங்க்’. இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் பாராட்டினர்.

அப்படிப்பட்ட ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் தற்போது அஜித் நடித்துவருகிறார். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

85% படிப்பிடிப்பு முடிந்துவிட்டதாம், அடுத்ததாக அஜித்தின் சண்டை காட்சி 3 நாட்கள் படமாக்கப்படவுள்ளது, திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சித்தரவுள்ளார்.

மார்ச் இறுதியில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து மே 1 ஆம் தேதி “நேர்கொண்ட பார்வை” வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment