நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி பிலிம் சிட்டியில் வேகமாக நடந்துவருகிறது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி சனி கிழமை அன்று நேர்கொண்ட பார்வை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ளா முதல் தமிழ் படம் இது எனபது குறிபிடத்தக்கது.

Suggestions For You

Loading...

Leave a Comment