நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள் குஷி!

nerkonda paarvai teaser

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் செய்திருக்கும் போனி கபூர் – மாஸ் தான்!

ஃபஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் இப்படத்தின் டீஸர் ரிலீஸ் பற்றி தகவல் வந்துள்ளது. அதவது நேர்கொண்ட பார்வை படத்தின் டீஸர் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது.

nerkonda paarvai first look
nerkonda paarvai first look

வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துவரும் அஜித், தனது சினிமா பயணத்தில் இதுவரை ஏற்காத ஒரு கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment