NGK படத்திற்காக தம்பி கார்த்தியுடன் இணைந்த சூர்யா!

“கடைக்குட்டி சிங்கம்” வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் தேவ். ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 14-ந்தேதியான காதலர் தினத்தன்று தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. தணிக்கைக்கு சென்று தேவ் படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்று வழங்கி உள்ளது.

இப்படத்துடன் சூர்யா நடித்துள்ள NGK டீசர் தியேட்டரில் ஒளிபரப்பாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள NGK படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ள நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment