அஜித்தை கலாய்த்த பிரபல மலையாள நடிகை – கடுப்பான தல ரசிகர்கள்!

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சமூக வலைதள சண்டை நாளுக்கு நாள் மிக தீவிரமாகி வருகிறது. தினம்தோறும் ஒருவரை ஒருவர் மோசமாக குறிப்பிட்டு தேசிய அளவில் டேக் செய்து வருகின்றனர். இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றுதான் பலரது கேள்வியும்.

இந்நிலையில் நேற்று வண்டு முருகன் அஜித் என வடிவேலுவின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு ஒரு டேக், கைப்புள்ள விஜய் என மற்றொரு டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

வண்டு முருகன் அஜித் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்த ட்விட்டை பார்த்த ஒரு அடர் லவ் பட புகழ் நடிகை நூரின் ஷெரிப் ‘அவர் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்’ என கூறியுள்ளார்.

இதை பார்த்து கோபமான அஜித் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Suggestions For You

Loading...