மலையாளத்தில் பேரன்பு படத்திற்கு கிடைத்த வரவேற்பு – கொட்டிய வசூல்!

ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்து நேற்று வெளியான படம் பேரன்பு. இப்படத்தில் அஞ்சலி, சாதனா போன்றவர்கள் நடித்துள்ளார்.

படம் வெளியாவதற்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பல விருதுகளை வாங்கியது. இதற்கு மத்தியில் நேற்று அணைத்து இடங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

பேரன்பு தமிழகத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், திரையரங்கு பெரிதும் கிடைக்காததால் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு பெறவில்லை.

ஆனால், மம்முட்டிக்கு கேரளாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலம் உள்ளதால், அங்கு இப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக ஸ்பெஷல் ஷோக்கள் நிறைய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இப்படம் கேரளாவில் முதல் நாள் ரூ 2 கோடி வரை வசூல் வந்திருக்கும் என கூறப்படுகின்றது.

Suggestions For You

Loading...

Leave a Comment