பேட்டயா? விஸ்வாசமா? – இந்த பிரபல திரையரங்கில் யார் அதிக வசூல் தெரியுமா?

விஸ்வாசம், பேட்ட படங்கள் இந்த வருடத்தின் பிரம்மாண்ட ஹிட் படங்களாக அமைந்தது. ரஜினிகாந்த், அஜித் ரசிகர்களை குஷி படுத்திய இப்படங்கள் வசூல் மழையும் பொழிந்தது.

விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என அனைவருமே இந்த படம் எங்களுக்கு லாபம் கொடுத்துள்ளது என்று பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

இன்று 50வது நாளில் அடியெடுத்து வைக்கிறது இந்த இரண்டு படங்கள். இந்நிலையில் பிரபல ரோஹினி திரையரங்க உரிமையாளரான நிகிலேஷ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் தங்களது திரையரங்கில் பேட்ட தான் அதிகம் வசூல், அதற்கு காரணம் என்னவென்றால் அதிகம் டிக்கெட் ஓப்பனிங் பேட்ட படத்திற்கு தான் வைத்தோம் என்றார்.

Suggestions For You

Loading...

Leave a Comment