தமிழகத்தில் 50 நாட்களில் பேட்ட, விஸ்வாசம் குவித்த வசூல் விவரம் – யார் முதலிடம்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் வெளியானது.

தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பேட்ட படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிடப்பட்டது. ஆனால் அங்கே எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இரண்டு படங்களும் வெளியாகி 50 நாட்களை கடந்துவிட்டது. இதில் விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 தியேட்டர்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. பேட்ட மிகவும் குறைவு தான்.

50 நாட்களில் பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 111 கோடி வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 130 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்கத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி 2 விற்கு பிறகு விஸ்வாசம் தான் உள்ளது.

Suggestions For You

Loading...