மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகர்!

ரஜினி, கமல், விஜய்யின் வெற்றி படங்களை தயாரித்த பழம்பெரும் நிறுவனம் விஜயா புரொடக்ஷன்ஸ் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது.

வாலு, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளார்கள்.

காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். இவர் சுந்தரபாண்டியன், ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைகிறார்.

இவர்களுடன் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.

Suggestions For You

Loading...

Leave a Comment